வேன் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
எப்போதும்வென்றான் அருகே வேன் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஓட்டப்பிடாரம்:
எப்போதும்வென்றான் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வேன் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பள்ளி வேன் டிரைவர்
எப்போதும்வென்றான் அருகில் உள்ள நமச்சிவாயபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கஜேந்திரன் (வயது 34). இவர் விளாத்திகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்துள்ளனர். ஆனால், குடிப்பழக்கம் இருந்த அவருக்கு யாரும் பெண் தர முன் வரவில்லையாம். இதனால் அவர் திருமணமாகாத விரக்தியில் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
அதேசமயம் அவர் குடிப்பழக்கத்தையும் நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.
விஷம் குடித்தார்
இந்நிலையில் நேற்று மாலையில் அவர் குடிபோதையில் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி ஊருக்கு வெளியே உள்ள கண்மாயில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எப்போதும்வென்றான் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருமணமாகாத விரக்தியில் வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.