விஷம் குடித்து வேன் டிரைவர் சாவு


விஷம் குடித்து  வேன் டிரைவர் சாவு
x

விஷம் குடித்து வேன் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 35). வேன் டிரைவர். இவருக்கு அனிதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 18-ந் தேதி தங்கராஜ் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சவாரி சென்று விட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி உள்ளதாக தங்கராஜிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மனமுடைந்த தங்கராஜ் நாங்குநேரி சுங்கச்சாவடி அருகில் வரும்போது விஷம் குடித்தார்.

அதே நேரத்தில் வேனை ஓட்டிக்கொண்டு அருப்புக்கோட்டை சென்று அங்குள்ள குடும்பத்தினரிடம் விஷம் குடித்த தகவலை தெரிவித்துள்ளார். இதனையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story