மோட்டார் சைக்கிள் விபத்தில் வேன் டிரைவர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் வேன் டிரைவர் பலி
x

ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வேன் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கரும்பூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 26), வேன் டிரைவர். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆம்பூர் அருகே பாங்கி ஷாப் சுடுகாடு அருகே தரைப்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் போலீசார் சந்தோஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story