தூத்துக்குடியில்வேன் டிரைவருக்கு கத்திக்குத்து:2 வாலிபர்கள் சிக்கினர்


தினத்தந்தி 30 Aug 2023 12:15 AM IST (Updated: 30 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்வேன் டிரைவரை கத்தியால் குத்திய 2 வாலிபர்கள் சிக்கினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகர் ஜோதி பாஸ் நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் கண்ணன் (வயது 44). இவர் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 25-ந் தேதி இவர், தூத்துக்குடி வெற்றிவேல்புரம் அருகே உள்ள ஒரு தியேட்டர் அருகே வேனை ஓட்டி வந்தார். அங்கு வந்த தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் அமல்ராஜ் மகன் விமல்ராஜ் (19), அந்தோணி மகன் சதீஷ் (19) உள்ளிட்ட 3 பேர் திடீரென்று வேனை வழிமறித்து நிறுத்தினர். கண்ணனை கத்தியால் குத்தியதுடன், வேனை சேதப்படுத்திவிட்டு, அவரிடம் இருந்த 2 செல்போன்களையும் பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்கு பதிவு செய்து விமல்ராஜ், சதீஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து 2 செல்போன்களும் மீட்க்கப்பட்டது. கைது செய்யப்பட்ட விமல்ராஜ் மீது ஏற்கனவே தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், சதீஷ் மீது ஒரு திருட்டு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story