மோட்டார் சைக்கிள் மீதுவேன் மோதல்; கட்டிட தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் மீதுவேன் மோதல்; கட்டிட தொழிலாளி பலி
x

மோட்டார் சைக்கிள் மீதுவேன் மோதல்; கட்டிட தொழிலாளி பலி

திருப்பூர்

மடத்துக்குளம்

மடத்துக்குளம் அருகே உள்ள உடையார்பாளைத்தை சேர்ந்தவர் கந்தசாமி (30). கட்டிட தொழிலாளி. இவர் தனது நண்பரான காரத்தொழுவை சேர்ந்த பாஸ்கரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணாபுரத்திற்கு சென்று விட்டு காரத்தொழுவு வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை கந்தசாமி ஓட்டினார். பின் இருக்கையில் பாஸ்கரன் பின்னால் அமர்ந்து இருந்தார். இவர்களுடைய மோட்டார் சைக்கிள் மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் பகுதியை கடக்கும் போது, எதிரே வந்த சரக்கு வேன் திடீரென்று வலதுபுறம் சாலையின் குறுக்கே திரும்பியது. அப்போது அந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இ்ந்த விபத்தில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த பாஸ்கரனுக்கு சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேன் ஓட்டிவந்த பழனி தாலுகா அய்யம்பாளையம் சேர்ந்த சிவராஜ் (64) மீது மடத்துக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story