தருவைகுளத்தில் வனாமி இறால் வளர்ப்பு பயிற்சி
தருவைகுளத்தில் வனாமி இறால் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணையில் தேசிய மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் "பினேயஸ் வனாமி இறால் வளர்ப்பு" குறித்து பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சாந்தகுமார் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பயிற்சி கையேட்டை வெளியிட்டார். உதவி பேராசிரியர் விஜய் அமிர்தராஜ் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார். பயிற்சியில் 50 பயனாளிகள கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். உதவி பேராசிரியர் சிவசங்கர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story