செம்மாண்டம்பாளையம் குட்டையில் வண்டல்மண் எடுக்க அனுமதி


செம்மாண்டம்பாளையம் குட்டையில் வண்டல்மண் எடுக்க அனுமதி
x
திருப்பூர்


அவினாசி அருகே செம்மாண்டம்பாளையம் குட்டையில் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மண் எடுத்து செல்கிறார்கள்.

செம்மாண்டம்பாளையம் குட்டை

அவினாசி ஒன்றியம் கருமாபாளையம் ஊராட்சி பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் செம்மாண்டம்பாளையம் குட்டை உள்ளது. மழைகாலங்களில் இந்த குட்டையில் தண்ணீர் தேங்கி நின்று விவசாயத்திற்கு பயன்படும். இந்த நிலையில் நேற்று 10 பொக்லைன் எந்திரங்கள் மூலம் 30-க்கு மேற்பட்டடிப்பர் லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் மண் நிரப்பி எடுத்து செல்லப்பட்டது. இதனால் எந்த வித அனுமதியுமின்றி லாரிகளில் மண் எடுத்து செல்வதாக பொதுமக்கள் மத்தியில பரவலாக பேசப்பட்டது.

இது குறித்து வருவாய்துறையிடம் விசாரித்தபோது கருமாபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாயத்திற்கு வண்டல்மண் தேவைக்கு பயன் பெரும் வகையில் வண்டல் மண் எடுப்பதற்கு ஏற்கனவே மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கியிருந்தார்.

இதற்கிடையில் அத்திக்கடவு திட்ட குழாய் பதிக்கும் பணி நடைபெற்றதால் அப்போது மண் எடுப்பது நிறுத்திவைக்கப்பட்டது.

மண் எடுத்து செல்லும் வாகனங்கள்

தற்போது குழாய் பதிக்கும் பணி முடிவடைந்த நிலையில் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையல் விவசாயிகள் மண் எடுத்து செல்வதாக தெரிவித்தனர்.


Next Story