வந்தவாசி ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா ஆலோசனை கூட்டம்


வந்தவாசி ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா ஆலோசனை கூட்டம்
x

வந்தவாசி ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி ரங்கநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.

வந்தவாசி ரங்கநாதர் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் ம.சிவாஜி முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற உபயதாரர்கள் 7-ம் நாள் தேரோட்டம் நடைபெற வழிவகை செய்ய வேண்டும். 9-ம் நாள் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும் கோமுட்டி குளக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என செயல் அலுவலர் ம.சிவாஜியிடம் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உபயதாரர்களிடம் உறுதி அளித்தார்.


Next Story