'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில் சோதனை ஓட்டம்


வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சோதனை ஓட்டம்
x

‘வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

வேலூர்

இந்தியாவில் பல்வேறு வசதிகள் கொண்ட அதிவேகமாக செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 11-ந் தேதி தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.

சென்னை சென்ட்ரலில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 5.50 மணிக்கு புறப்பட்டது. இது காட்பாடி ரெயில் நிலையத்தை காலை 7.30 மணிக்கு வந்தடைந்தது. பின்னர் 7.39 மணிக்கு புறப்பட்டு மைசூரை நோக்கிச் சென்றது. நண்பகல் 12.30 மணிக்கு மைசூரை அடைந்தது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்தை கடக்கும் வரை ரெயில்வே தண்டவாளங்களை பொதுமக்கள் கடக்காத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ெரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது


Next Story