வந்தே பாரத் ரெயில்கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும்:கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கோரிக்கை


வந்தே பாரத் ரெயில்கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும்:கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கோரிக்கை
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என்று கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி (மேற்கு):

வந்தே பாரத் ரெயில் நெல்லை-சென்னை இடையே நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஏற்கனவே தென்னக ரெயில்வே பொது மேலாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று சென்னையில் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங்கை 2-வது முறையாக அவர் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், வந்தே பாரத் ரெயில் அதிக வருமானம் ஈட்டி தரும் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி இருந்தார். இந்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட தென்னக ெரயில்வே மேலாளர் இதுகுறித்து பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளதாக, எம்.எல்.ஏ. தெரிவித்தார்.


Next Story