வண்டிமலைச்சி அம்மன் கோவில் கொடை விழா
செண்பகராமநல்லூர் வண்டிமலைச்சி அம்மன் கோவில் கொடை விழா நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே செண்பகராமநல்லூர் வண்டிமலையான், வண்டிமலைச்சி அம்மன் கோவில் கொடை விழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாளில் தீர்த்தம் எடுத்து வருதல், சிறப்பு அபிஷேகம், 3 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை, அன்னதானம் நடந்தது. 2-ம் நாளில் விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலம், உச்சிக்கால பூஜை, அம்மன் கும்பம் எடுத்து வீதி உலா வருதல், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல், பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வீதி உலா வருதல், அம்மன் அருள்வாக்கு கூறுதல், அலங்கார பூஜை, வாணவேடிக்கை, சாம பூஜை, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி தொழிலதிபர் பரப்பாடி அபி ஸ்வீட்ஸ் அ.வேல்துரை, அக்தார் என்.பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story