வன்னியர் சங்கத்தினர் வீரவணக்க நாள் ஊர்வலம்


வன்னியர் சங்கத்தினர் வீரவணக்க நாள் ஊர்வலம்
x

வந்தவாசியில் வன்னியர் சங்கத்தினர் சார்பில் வீரவணக்க நாள் ஊர்வலம் நடந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியில் வன்னியர் சங்கம் சார்பில் வீரவணக்க நாள் ஊர்வலம் நடைபெற்றது.

இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஊர்வலத்தில் பங்கேற்றோர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி சென்றனர்.

ஊர்வலத்துக்கு வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ப.மச்சேந்திரன் தலைமை தாங்கினார். பா.ம.க. மாவட்ட செயலாளர் அ.கணேஷ்குமார், நகர செயலாளர் து.வரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மேற்கு எம்.எல்.ஏ. இரா.அருள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

வந்தவாசி ஐந்து கண்பாலம் அருகில் புறப்பட்ட ஊர்வலம் தேரடி, பஜார் வீதி, கோட்டை மூலை வழியாக குளத்துமேடு பகுதியில் உள்ள தர்மராஜா கோவில் அருகே சென்று முடிவடைந்தது.

அங்கு இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.


Next Story