கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம்


கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 12 July 2023 12:45 AM IST (Updated: 12 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

பயிர் நிவாரண தொகையில் கையாடல் செய்ததாக எழுந்த புகாரின்பேரில் கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர்

பயிர் நிவாரண தொகையில் கையாடல் செய்ததாக எழுந்த புகாரின்பேரில் கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விவசாயிகள் புகார்

திருவாரூர் மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்து இருந்தது. அந்த வகையில் குடவாசல் தாலுகா விளாகம் கிராமத்துக்கு ரூ.13 லட்சத்து 80 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிவாரணத் தொகை சென்றடையவில்லை என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நடராஜன், முருகையன், குணசேகரன், சிவக்குமார், தில்லை விநாயகம் ஆகியோர் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயிடம் புகார் மனு அளித்தனர்.

நிலம் இல்லாதவர்கள் பெயரில்...

அதில், 'தங்கள் கிராமத்துக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகை, நிலம் இல்லாதவர்களின் பெயரில் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி பெயர்களிலும் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதனால் கிராமத்தில் வசிக்கும் 25 விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை சென்றடையவில்லை' என கூறி இருந்தனர்.

பணியிடைநீக்கம்

இதுகுறித்து திருவாரூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்த கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருவாரூர் கோட்டாட்சியர் சங்கீதா விசாரணை நடத்தி நிவாரண தொகையை கையாடல் செய்ததாக விளாகம் கிராம நிர்வாக அலுவலர் குருமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


Next Story