வரசித்தி விநாயகர் கோவில் திருவிழா


வரசித்தி விநாயகர் கோவில் திருவிழா
x

சரபோஜிராஜபுரம் வரசித்தி விநாயகர் கோவில் திருவிழா நடந்தது.

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரம் மேல தெருவில் அமைந்திருக்கும் வரசித்தி விநாயகர் கோவிலில் சித்திரை கிருத்திகை திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு குடமுருட்டி ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளில் வழியாக வந்து கோவிலை அடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.. இதனைத் தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story