வரதராஜபெருமாள் கோவில் தேரோட்டம் குறித்து அதிகாரிகள் ஆய்வு


வரதராஜபெருமாள் கோவில்   தேரோட்டம் குறித்து அதிகாரிகள் ஆய்வு
x

ஆரணியில் வரதராஜபெருமாள் கோவில் தேரோட்டம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சார்பனார்பேட்டையில் பெருந்தேவி தாயார் சமேத கில்லாவரதராஜபெருமாள் கோவிலில் 97-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியாக 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

அதையொட்டி கோவில் செயல் அலுவலர் ம.சிவாஜி, ஆரணி தாசில்தார் க.பெருமாள், ஆரணி நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி, மின்வாரிய உதவி செயற் பொறியாளர் பரந்தாமன், கோவில் ஆய்வாளர் நடராஜன், ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் வேலுமணி மற்றும் விழா குழுவை சேர்ந்தவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது தேர் செல்லும் சாலையான பெரியகடைவீதி, மண்டி வீதி, மார்க்கெட் ரோடு, காந்தி ரோடு, வடக்கு மாட வீதி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.


Next Story