வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம்21.85 அடியாக குறைந்தது


வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம்21.85 அடியாக குறைந்தது
x

வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.85 அடியாக குறைந்தது.

ஈரோடு

அந்தியூர் பர்கூர் மலையின் 2 மலைகளுக்கிடையில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 33.46 அடியாகும். இந்த நிலையில் பருவமழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. தற்போது 21.85 அடியாக காணப்படுகிறது.

இதனால் அணை குட்டை போல் காணப்படுகின்றன. தொடர்ந்து பருவ மழை பெய்யவில்லை என்றால் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிடும். இதனால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்து உள்ளனர்.


Next Story