சுருக்கெழுத்து தேர்வில் ஆள் மாறாட்டம்; 2 பெண்கள் மீது வழக்கு
சுருக்கெழுத்து தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த 2 பெண்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது
மதுரை
மதுரை-திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சில மாதங்களுக்கு முன்பு சுருக்கெழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் மதுரை சிம்மக்கல்லைச் சேர்ந்த சித்ராலட்சுமி என்பவருக்கு தேர்வு எழுத அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் சித்ரா லட்சுமிக்கு பதிலாக, வித்யா பாரதி என்பவர் தேர்வில் பங்கேற்று எழுதியுள்ளார். இதுதொடர்பாக சுருக்கெழுத்துத் தேர்வு வாரியத்தலைவர் செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சித்ராலட்சுமி, வித்யா பாரதி ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story