தூத்துக்குடி துறைமுகம் வழியாக கடத்தப்பட இருந்தரூ.60 லட்சம் மதிப்பிலான பல்வேறு பொருட்கள் தடுத்து நிறுத்தம்

தூத்துக்குடி துறைமுகம் வழியாக கடத்தப்பட இருந்தரூ.60 லட்சம் மதிப்பிலான பல்வேறு பொருட்கள் தடுத்து நிறுத்தம்
x

தூத்துக்குடி துறைமுகம் வழியாக கடத்தப்பட இருந்த ரூ.60 லட்சம் மதிப்பிலான பல்வேறு பொருட்கள் நடப்பு ஆண்டில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என்று சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு ஆணையர் டி.அனில் தெரிவித்தார்.

தூத்துக்குடி

திறப்பு விழா

தூத்துக்குடி பீச் ரோட்டில் சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு இயங்கி வருகிறது. இந்த அலுவலக கட்டிடம் 1901-ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது அந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு உதவி ஆணையர் நரசிம்மன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு ஆணையர் டி.அனில் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சுங்கத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ரூ.60 லட்சம்

பின்னர் ஆணையர் நிருபர்களிடம் கூறுகையில், "திருச்சியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கடத்தல் தடுப்பு பிரிவு சுங்கத்துறை ஆணையரகம் கடத்தலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடல் வழியாக கடத்தப்பட இருந்த மூலிகை பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். ஏதாவது கடத்தல் நடைபெறுவதாக தெரிந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். அவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும்" என்றார்.

-------------

Next Story