நாகையை தூய்மையான நகராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
நாகையை தூய்மையான நகராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
நாகப்பட்டினம்:
நாகையை தூய்மையான நகராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்ைக எடுக்கப்பட்டு வருகிறது என்று நகர்மன்ற தலைவர் மாரிமுத்து பேசினார்.
சுற்றுச்சூழல் தினம்
நாகை நகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நேற்றுமுன்தினம் வீடு வீடாக பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். ஆணையர் ஸ்ரீதேவி வரவேற்றார். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதற்கு 2 வண்ண பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் வீடு வீடாக வழங்கப்பட்டது. பின்னர் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து பேசுகையில்,
நாகையை தூய்மையான நகராட்சியாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தரம் பிரித்து வழங்க வேண்டும்
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். நகரில் உள்ள கால்வாய்கள், நீர்நிலைகள் என எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி தண்ணீர் செல்லமுடியாமல் கொசுக்கள் உற்பத்தியாக ஏதுவாக உள்ளது.
இதனால் நாள் ஒன்றுக்கு டன் கணக்கில் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதனை தரம் பிரிப்பதற்கு நிறைய பொருட்செலவு ஏற்படும். எனவே ஒவ்வொரு வீட்டிலும் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதால் குப்பையிலிருந்து உரம், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பயனுள்ள பொருட்கள் தயாரிக்க எளிதாக இருக்கும் என்றார்.இதில் வார்டு கவுன்சிலர் சுந்தரி, துப்புரவு ஆய்வாளர் அரசகுமார், துப்புரவு மேற்பார்வையாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.