வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் திட்ட  மருத்துவ முகாம்
x

தஞைாயிறு அருகே வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறு அருகே திருவிடைமருதூர் ஊராட்சியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தாமரைச்செல்வி முருகதாஸ் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் இளையராஜா வரவேற்றார். முகாமில் சர்க்கரை நோய் பரிசோதனைகள், பொதுமருத்துவம்,மகப்பேறு மருத்துவம், இ.சி.ஜி., ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்பட்டன.இதில் டாக்டர்கள் அஸ்வினி, வேம்புச்செல்வன், கிருஷ்ணமணி உள்பட பலர் கலந்து கொண்டு 1200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் சுகாதார மேற்பார்வையாளர் பால் ஆபிரகாம், சுகாதார ஆய்வாளர் நாகராஜ், சுகாதார செவிலியர் காந்திமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story