வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம்


வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம்
x

கலைஞரின் வரு முன்காப்போம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர் அருகே வடமலைகுறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் செங்குன்றாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வரு முன்காப்போம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமினை ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். முகாமில் கலந்து கொண்ட இரும்புச்சத்து குறைவாக உள்ள பெண்களுக்கு யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் ஊட்டச்சத்து மற்றும் இரும்பு சத்துள்ள மாத்திரைகளை வழங்கினார்.

முகாமில் வட்டார மருத்துவர் ஆரோக்கிய ரூபன், செங்குன்றாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் திட்டத்தின் சிறப்பு குறித்து எடுத்துரைத்தனர். முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விநாயகமூர்த்தி நன்றி கூறினார்.


Next Story