வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
x

வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பொற்பதிந்த நல்லூர் கிராமத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் புகழேந்தி வரவேற்று பேசினார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க சொ.க. கண்ணன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 924 பயனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 332 பயனாளிகளுக்கு ஆய்வக பரிசோதனைகள் செய்யப்பட்டன. 21 கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, 27 பயனாளிகளுக்கு இசிஜி பரிசோதனை, 7 பயனாளிகளுக்கு புற்றுநோய் கண்டறிதல் பரிசோதனை, 57 பயனாளிகளுக்கு சர்க்கரை நோய் கண்டறிதல் பரிசோதனை, 42 பயனாளிகளுக்கு ரத்த சோகை கண்டறிதல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20 பயனாளிகள் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். கண் பரிசோதனை செய்து கொண்ட பயனாளிகளில் 12 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். 128 பயனாளிகள் சித்த மருத்துவ ஆலோசனை பெற்றனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அழகு சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. மக்களை தேடி மருத்துவ பெட்டகங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தலிங்கம், விஸ்வநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மலர் கண்ணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜு, கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார், தலைமையாசிரியர் ஜோதிலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர்கள் அசோக்குமார் நன்றி தெரிவித்து பேசினார்.


Next Story