கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவில் வருசாபிஷேக விழா


கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவில் வருசாபிஷேக விழா
x

கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் வருசாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 7 மணி முதல் பஞ்சஸூக்த ஹோமம், 108 இளநீர், 108 லிட்டர் பால் அபிஷேகம், பரமபுருஷ ஆராதனை, கும்பாபிஷேகம், விமானம், மூலவர் மற்றும் உத்ஸவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு கருடசேவை, நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ரவி பட்டாச்சாரியார் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story