அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் வருசாபிஷேக விழா


அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் வருசாபிஷேக விழா
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுடன் இணைந்த அறம் வளர்த்த நாயகி உடனுறை காஞ்சி விஜயகட்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 7 மணிக்கு கச்சி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்றது. 9 மணி முதல் மதியம் 12 மணிக்குள் கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டனர். பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகேஸ்வர பூஜை, உச்சிக்கால தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. அதனை தொடா்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவு 7 மணிக்கு சிறப்பு திருவிளக்கு பூஜை, 7.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, 8.30 மணிக்கு உற்சவமூர்த்திக்கு சோடஷ தீபாராதனை, 9 மணிக்கு சுவாமி- அம்மன் ரிஷப வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தக்கார் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், வருஷாபிஷேக சிறப்பு கட்டளைதாரர்கள் செய்து இருந்தனர்.


Next Story