சுகவனேசுவரர் கோவிலில் வசந்த நவராத்திரி நிறைவு விழா-பக்தர்களுக்கு சாமி உருவம் பதித்த செம்பு டாலர் வழங்கப்பட்டது
சுகவனேசுவரர் கோவிலில் வசந்த நவராத்திரி நிறைவு விழா நடந்தது. இதையொட்டி பக்தர்களுக்கு சாமி உருவம் பதித்த செம்பு டாலர் வழங்கப்பட்டது.
சேலம்
சேலம் சுகவனேசுவரர் கோவிலில் வசந்த நவராத்திரி விழா கடந்த 22-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் மாலையில் பக்தர்களால் அபிராமி, அந்தாதி பாராயணம் பாடப்பட்டன. நேற்று வசந்த நவராத்திரி நிறைவு விழா நடந்தது. மாலையில் கோமாதா பூஜை நடந்தது. பின்னர் நந்திகேஸ்வரர் பூஜை நடந்தது. தொடர்ந்து சுகவனேசுவரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. பின்னர் சொர்ணாம்பிகை அம்மன் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட சொர்ணாம்பிகை அம்மனின் உருவம் பதித்த செம்பு டாலர்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
Next Story