சாலை, ரேஷன் கடை அமைப்பது குறித்து வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆய்வு


சாலை, ரேஷன் கடை அமைப்பது குறித்து வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சித்தேரி கிராமத்தில் சாலை, ரேஷன் கடை அமைப்பது குறித்து வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆய்வு

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்:

தியாகதுருகம் அருகே சித்தேரி கிராமத்தில் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான வசந்தம் கார்த்திகேயன் ஆய்வு செய்தார். அதாவது, கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தார் சாலை, கழிவுநீர் கால்வாய் மற்றும் ரேஷன்கடை அமைப்பதற்கான இடங்களை அவர் பார்வையிட்டார். ஆய்வின்போது தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் செந்தில் முருகன், சீனிவாசன், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி கொளஞ்சிவேலு மற்றும் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story