பிரத்தியங்கிரா தேவிக்கு வஸ்திர யாகம்


பிரத்தியங்கிரா தேவிக்கு வஸ்திர யாகம்
x

பிரத்தியங்கிரா தேவிக்கு வஸ்திர யாகம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், பொய்யாத நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று மிளகாய் சண்டி யாகம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு வஸ்திர யாகம் நடைபெற்றது. யாகத்தில் பக்தகர்கள் வேண்டுதலின்பேரில் 500 சேலைகள் யாகத்தில் இடப்பட்டன. பின்னர் மூலிகைகள், பழங்கள் யாகத்தில் போடப்பட்டன. தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story