வாட்டாகுடி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு


வாட்டாகுடி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு
x

வாட்டாகுடி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறை அடுத்த வாட்டாகுடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு நடந்தது. விழாவையொட்டி கடந்த 30-ந்தேதி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு, கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் நீலமேகம், திருப்பணிக்குழு தலைவர் ஆறுமுகம், ஊராட்சி துணைத் தலைவர் வீரமணி மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story