வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை


வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
x

சம்பள பாக்கி கேட்டு, வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தூய்மைப்பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோர் சம்பள பாக்கி கேட்டு வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கு சி.ஐ.டி.யூ. மாவட்டக்குழு உறுப்பினர் பாபு தலைமை தாங்கினார். மாவட்டத்தலைவர் ராமசாமி, ஒன்றிய பொறுப்பாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதைத்தொடர்ந்து வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் நடகோட்டை, ரெங்கப்பநாயக்கன்பட்டி, விராலிமாயன்பட்டி, விருவீடு, செக்கபட்டி ஆகிய ஊராட்சிகளில் சம்பள பாக்கி வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். கையுறை வழங்க வேண்டும். வண்டிகளை பழுது நீக்கி தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயலட்சுமியிடம் அவர்கள் மனு கொடுத்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story