குழித்துறையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வாவுபலி பொருட்காட்சி இன்று தொடங்குகிறது


குழித்துறையில்   2 ஆண்டுகளுக்கு பிறகு வாவுபலி பொருட்காட்சி   இன்று தொடங்குகிறது
x

குழித்துறையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வாவுபலி பொருட்காட்சி இன்று தொடங்குகிறது.

கன்னியாகுமரி

குழித்துறை,

குழித்துறையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வாவுபலி பொருட்காட்சி இன்று தொடங்குகிறது.

வாவுபலி பொருட்காட்சி

குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள மைதானத்தில் வாவுபலி பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக வாவுபலி பொருட்காட்சி நடைபெறவில்லை.

இந்த ஆண்டு 97-வது வாவுபலி பொருட்காட்சி இன்று (புதன்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதி வரை நடக்கிறது. இந்தப் பொருட்காட்சி தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.

அமைச்சர் மனோ தங்கராஜ்

இதன் தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்கு குழித்துறை வி.எல்.சி.மண்டபத்தில் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்குகிறார். குழித்துறை நகராட்சி தலைவர் பொன்.ஆசைத்தம்பி வரவேற்றுப் பேசுகிறார்.

நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் விஜயலட்சுமி திட்ட விளக்கவுரை நிகழ்த்துகிறார்.

பொருட்காட்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்து பேசுகிறார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்து பேசுகிறார்.

விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகிறார்கள்.

முடிவில் நகராட்சி ஆணையாளர் ராம திலகம் நன்றி கூறுகிறார்.

சிறப்பம்சங்கள்

வாவுபலி பொருட்காட்சியில் பலவித பக்க காட்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், மலர் செடிகளின் விற்பனை போன்றவை சிறப்பு அம்சங்களாக இடம்பெறுகின்றன. இது குறித்து பொருட்காட்சி குத்தகைதாரர் பால்ராஜ் கூறியதாவது:-

வாவுபலி பொருட்காட்சி திடலில் அறிவியல் கண்காட்சி, மரண கிணற்றில் மாருதி கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓடும் சாகச காட்சிகள், ராட்சத ராட்டினம், கொலம்பஸ், குழந்தைகளுக்கான ராட்டினம், நாகராணி ஷோ, விவசாய பொருட்கள் மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி, மின் அலங்கார கண்காட்சி உள்பட பலவித சிறப்பு அம்சங்கள் இடம் பெறுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story