வத்தலக்குண்டுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வத்தலக்குண்டுவில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முஸ்லிம்களை அண்ணா பிறந்தநாளில் விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் ஒன்றிய துணைச்செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளர் பாவலன், நில உரிமை மீட்பு இயக்க மாநில துணை செயலாளர் உலகநம்பி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ரெங்கராசன், தமிழ்முரசு, இசுலாமிய ஜனநாயக பேரவை மாநில துணைச்செயலாளர் ஜலால்முகமது உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நிர்வாகி அலாவுதீன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story