விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் சசிகுமார் தலைமை தாங்கினார்.

சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் கோட்டி என்ற கோவேந்தன், விஜயசாரதி உள்பட நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் நாகராஜன் வரவேற்றார்.

மாநில அமைப்பு செயலாளர் கி.கோவேந்தன், வேலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் சிவ.செல்லபாண்டியன், சமூக நல்லிணக்க பேரவை மாநில செயலாளர் வேலூர் பிலிப் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.

இதில், மாவட்ட துணை செயலாளர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலையநீர்த்தேக்க தொட்டியில் மனித மலத்தை கலந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

முடிவில் வேலூர் 2-ம் பகுதி செயலாளர் ரீகன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story