வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்


வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
x

வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக சிவன் கோவில் கட்டுவது என்று பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் சுவாமி கோவில், வேத நாராயண பெருமாள் சுவாமி கோவில், ஸ்ரீதேவி, பூதேவி, விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நடராஜர், நவகிரகம் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி சன்னதிகள் கட்டப்பட்டன. திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் கும்பாபிஷேக விழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து கணபதி ஹோமம், மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. நேற்று காலை நாடி சந்தனம், பூர்ணாஹுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர், வேத நாராயண பெருமாள் உள்பட 11 விமானங்களுக்கு ஏக காலத்தில் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மூலவருக்கு மகாஅபிஷேகம், திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெற்றது. விழாவில் பாலையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடைெபற்றது.


Next Story