வேதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்


வேதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்
x

ெசய்யாறு வேதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை

செய்யாறு

ெசய்யாறு வேதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிரம்மோற்சவ விழா

செய்யாறு டவுன் திருவோத்தூரில் பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ரதசப்தமி பிரம்மோற்சவ விழா நடந்தது.

இதையடுத்து 2 ஆண்டுகளாக கும்பாபிஷேக பணிகள் மேற்கொண்டதால் பிரம்மோற்சவ விழா நடைபெறவில்லை. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.

அதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான ரதசப்தமி பிரம்மோற்சவ விழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து தினமும் ஒரு வாகனம் என கற்பக விருட்ச காமதேனு வாகனம், சூரிய பிரபை, சந்திரபிரபை, பூத வாகனம், பெரய நாக வாகனம், அதிகார நந்தி வாகனம், பெரிய ரிஷப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் காட்சியளித்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

நேற்று சந்திரசேகரருக்கு அபிஷேகம், 63 நாயன்மார்கள் திருவீதி உலா, இரவு அம்மன் தோட்ட உற்சவம், திருக்கல்யாணம், அதனைத்தொடர்ந்து திருக்கல்யாண யானை வாகன சேவை நடந்தது.

தேரோட்டம்

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடந்தது. இன்று அதிகாலை ஒ.ஜோதி எம்.எல்.ஏ தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து வேதபுரீஸ்வரர், பாலகுஜாம்பிகை, விநாயகர் ஆகிய தேர்களை திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

தேர் சன்னதி தெரு, ஆற்றங்கரை தெரு, குமரன் தெரு வழியாக சென்று கோவிலை அடைந்தது.

2 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவ விழா நடைபெற்றதால் செய்யாறு மற்றும் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

திருவீதி உலா

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை சந்திரசேகரர் திருவீதி உலாவும், இரவு குதிரை வாகன சேவையும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அதிகார நந்தி வாகன சேவையும் நடைபெறுகிறது.

பிரம்மோற்சவ விழாவின் இறுதி நாளான 31-ந் தேதி காலை நடராஜர் திருவீதி உலாவும், மாலை 3 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தொடர்ந்து இரவு கொடி இறக்கமும், ராமேஸ்வர திருக்கைலாய சேவை, பஞ்சமூர்த்திகள் புறப்படும் நடைபெறுகிறது.

பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


Next Story