வீழிநாதசுவாமி கோவில் தீர்த்தவாரி
திருவீழிமிழலை வீழிநாதசுவாமி கோவில் தீர்த்தவாரி நடந்தது.
திருவாரூர்
குடவாசல்:
குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலை வீழிநாத சுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டிநேற்று முன்தினம் தீர்த்தவாரி நடந்தது. முன்னதாக சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் சாமி வீதி உலா நடைபெற்றது. இரவு 10 மணிக்கு கோவில் எதிரே உள்ள தீர்த்த குளத்தில் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதையடுத்து நடராஜ பெருமான் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் வேலப்ப சுவாமிகள் முன்னிலையில் கொடி இறக்க நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story