வீரபாண்டி ஆ.ராஜா நினைவு கோப்பைக்கான மாநில கைப்பந்து போட்டி தொடக்கம்


வீரபாண்டி ஆ.ராஜா நினைவு கோப்பைக்கான மாநில கைப்பந்து போட்டி தொடக்கம்
x

வீரபாண்டி ஆ.ராஜா நினைவு கோப்பைக்கான மாநில கைப்பந்து போட்டி தொடங்கி வைத்தார்.

சேலம்

சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள வி.எஸ்.ஏ. கல்வி நிறுவனம், சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் ஆகியவை இணைந்து வீரபாண்டி ஆ.ராஜா நினைவு கோப்கைக்கு மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து போட்டியை நடத்துகிறது. இதன் தொடக்க விழா நேற்று வி.எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு கல்லூரி தலைவர் டாக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணைத்தலைவர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி கலந்து கொண்டு மாணவர்களுக்கான போட்டியை தொடங்கி வைத்தார். மாணவிகளுக்கான போட்டியை டாக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. போட்டி வருகிற 29-ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடக்கிறது.


Next Story