வீரமனோகரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
குலசேகரன்பட்டினம் வீரமனோகரி அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை சித்திரை திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.
தூத்துக்குடி
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் வடக்கூர் வீரமனோகரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூைஜகளும், காலையில் மாலையிலும் வீதி உலாவும் நடக்கிறது. 10-ம் திருநாளான 23-ந்தேதி திருவிழா நிறைவு பூஜை நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வீரபாகு வல்லவராயர் செய்து வருகிறார்.
Related Tags :
Next Story