கட்டலாங்குளத்தில் வீரன் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா:மோட்டார் சைக்கிளில் பங்கேற்க தடை


கட்டலாங்குளத்தில் வீரன் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா:மோட்டார் சைக்கிளில் பங்கேற்க தடை
x
தினத்தந்தி 7 July 2023 12:15 AM IST (Updated: 7 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கட்டலாங்குளத்தில் வீரன் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழாவில் மோட்டார் சைக்கிளில் பங்கேற்க தடை விதித்து கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைகூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கட்டலாங்குளத்தில் வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவில் மோட்டார் சைக்கிளில் சென்று பங்கேற்க கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆலோசனை கூட்டம்

கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா ஜூலை 11-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள், சமுதாய அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு உதவி கலெக்டர் (பொறுப்பு) ஜெயா தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், கயத்தாறு தாசில்தார் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாலாட்டின்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின், வீரன் அழகுமுத்துக்கோன் வாரிசுதாரர் வனஜா மற்றும் வீரன் அழகுமுத்துக்கோன் நலச்சங்கத்தினர், யாதவ அமைப்பினர் கலந்து கொண்டனர்.

மோட்டார் சைக்கிளுக்கு தடை

கூட்டத்தில், கட்டலாங்குளத்தில் நடைபெறும் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று பங்கேற்க அனுமதி கிடையாது. பால்குடம் எடுக்கும் மக்கள் விழாவுக்கு முந்தைய நாளே வந்துவிட வேண்டும். அவர்கள் விழா நாளன்று காலையில் சரவணபுரத்தில் இருந்து பால்குடம் எடுத்து வரலாம்.

வாடகை வாகனங்களில் விழாவுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது. வாகனங்களின் மேற்கூரையில் அமர்ந்து வரக்கூடாது. கோவில்பட்டியில் இருந்து கட்டலாங்குளத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். கட்டலாங்குளத்தில் மருத்துவ குழுவினர் தயாராக இருப்பார் கள். தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை மற்றும் சுகாதார பணிகள் நிறைவேற்றப்படும். விழா அமைதியாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.


Next Story