வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு


வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் ஆய்வு செய்தார்.

டி.ஐ.ஜி. ஆய்வு

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் 253-வது பிறந்தநாள் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் நடக்கிறது.

விழாவில் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி வீரன் சுந்தரலிங்கனார் மணி மண்டபத்தினை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் அரசு விழா நடைபெறும் இடம் மற்றும் மணிமண்டபத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு நடத்தினர்.

அறிவுரை

மேலும் எவ்வித பிரச்சினை, இடையூறு இல்லாமல் பொதுமக்கள் வீரன் சுந்தரலிங்கனார் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்தும் வகையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் இருக்க வேண்டும் என்று தேவையான அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

ஆய்வின் போது மணியாச்சி துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன், ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர்கள் முத்துராமன், சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ், ரமேஷ், சதீஷ் நாராயணன், எபினேசர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story