பேரிடர் மேலாண்மை ஒத்திகை
திருப்பூர் ஆண்டிபாளையம் குளக்கரையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடைபெற்றது. நிகழ்ச்சியை கலெக்டர் வினீத் தொடங்கி வைத்தார். மழை வெள்ளம் ஏற்படும் போது பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து செய்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. சாலையின் நடுவே மரம் விழுந்து அதில் மாற்றிக் கொள்ளும் நபர்களை காப்பாற்றுவது, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தால் வீட்டில் குடியிருக்கும் பொது மக்களை காப்பாற்றுவது போன்ற நிகழ்வுகளை தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர் செய்து காட்டினர்.
வெள்ளத்தில் மாட்டிக்கொள்பவர்களை மீட்டு மருத்துவ முகாமிற்கு விரைவாக அனுப்புவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. குளத்தில் சிக்கிக்கொள்ளும் நபர்களையும் தீயணைப்பு துறையினர் சிறு படகு மூலம் சென்று காப்பாற்றும் நிகழ்ச்சியும் நடத்தி காட்டினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட அலுவலர் பூபதி, உதவி மாவட்ட அலுவலர் ஜெய்சங்கர், நிலை அலுவலர் பாஸ்கர், நிலை அலுவலர் (போக்குவரத்து) ஆண்டவர் ராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் கலந்து கொண்டனர்.
---