தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் தர்ணா


தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் தர்ணா
x

சில்லறை வணிகத்தை முறைப்படுத்தக்கோரி தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

சில்லறை வணிகத்தை முறைப்படுத்தக்கோரி தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காய்கறி மார்க்கெட்

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பகுதியில் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த காய்கறி மார்க்கெட்டில் 50 மொத்த வியாபாரிகளும், 350 சில்லறை வியாபாரிகளும் என 400 வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர். இங்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள், வெளியூர் சில்லறை வியாபாரிகள் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் ஒரு சில மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரிகளின் வியாபாரத்தை பாதிக்கும் வகையில் சில்லறை விலையில் காய்கறிகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

இதனால் மார்க்கெட் பகுதியில் சில்லறை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் தங்களுடைய வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி சில்லறை மற்றும் மொத்த வியாபாரத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தாராசுரம் காய்கறி மார்க்கெட் முன்பு நேற்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

வியாபாரிகளின் போராட்டத்தால் மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகலெட்சுமி, அழகேசன் ஆகியோர் அங்கு சென்று வியாபாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது சில்லறை விற்பனையை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் வியாபாரிகள் கலைந்து சென்றனர்.


Next Story