அரசுப்பள்ளியில் காய்கறித்தோட்டம் அமைக்கும் பணி


அரசுப்பள்ளியில் காய்கறித்தோட்டம் அமைக்கும் பணி
x

அரசுப்பள்ளியில் காய்கறித்தோட்டம் அமைக்கும் பணி

திருப்பூர்

போடிப்பட்டி,

உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நமது பசுமை பள்ளித் திட்டத்தின் கீழ் குறு காய்கறித் தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவின் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்வுக்கு உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மகாலட்சுமி முருகன், பாரதியார் நூற்றாண்டு மகளிர் பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயா ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரியின் தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவை சேர்ந்த மாணவிகள், பள்ளி வளாகத்தில் வெண்டை, அவரை, பாகல், முருங்கை, கொத்தவரை, கீரை, தக்காளி, பொரியல் தட்டை உள்ளிட்ட காய்கறிகளின் விதைகளை நடவு செய்து குறுந்தோட்டம் அமைக்கும் பணியினை மேற்கொண்டனர்.

இந்த காய்கறித்தோட்டத்தின் மூலம் கிடைக்கும் காய்கறிகளை மதிய சத்துணவுக்குப் பயன்படுத்துவதன் மூலம் தாங்களே விளைவித்த காய்கறிகளை தாங்களே உண்ணும் சந்தோஷம் மாணவிகளுக்குக் கிடைக்கும். அத்துடன் காய்கறித்தோட்டம் உருவாக்குவதில் ஆர்வம் ஏற்பட்டு வீடுதோறும் காய்கறித் தோட்டம் அமைப்பதன் மூலம் சத்தான, புத்தம் புதிய, ரசாயனக் கலப்பில்லாத காய்கறிகளை அனைவரும் பயன்படுத்தும் வாய்ப்பு உருவாகும். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவின் துறைத்தலைவர் பிருந்தா, ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, மணிமேகலை, ரம்யா, சத்யப்ரியா மற்றும் தமிழ்துறை மாணவிகள் இணைந்து செய்திருந்தனர்.



Next Story