காய்கறி விலை கிடுகிடு உயர்வு
கடும் பனிப்பொழிவால் வரத்து குறைந்ததால் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்தது. வெண்டைக்காய் ரூ.90, கத்தரிக்காய் ரூ.60-க்கு விற்பனையானது.
கோவை
கடும் பனிப்பொழிவால் வரத்து குறைந்ததால் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்தது. வெண்டைக்காய் ரூ.90, கத்தரிக்காய் ரூ.60-க்கு விற்பனையானது.
காய்கறி மார்க்கெட்டுகள்
கோவையில் மேட்டுப்பாளையம் ரோட்டில் எம்.ஜி.ஆர். மார்க் கெட், அண்ணா மார்க்கெட், டவுன்ஹால் டி.கே.மார்க்கெட், உக் கடம் காய்கறி மார்க்கெட் ஆகிய காய்கறி மார்க்கெட்டுகள் உள் ளன.
இந்த மார்க்கெட்டுகளுக்கு தொண்டாமுத்தூர், காரமடை, மேட்டுப்பாளையம், நரசிபுரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகு திகளில் இருந்தும், மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.
இங்கு சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச்செல்கிறார்கள்.
இங்கு பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்பிறகு காய்கறி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பனிப்பொழிவு
ஆனால் தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக காய்கறிக ளின் விளைச்சல் குறைந்து உள்ளது. இதனால் வரத்து குறைந்து காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.
கோவை டி.கே.மார்க்கெட்டில் கடந்த மாதம் கிலோ ரூ.20-க்கு விற்ற தக்காளி நேற்று ரூ.40-க்கு விற்கப்பட்டது. முருங்கைக்காய் விலை யும் கடுமையாக உயர்ந்து ஒரு கிலோ ரூ.200-க்கு விற்கப்பட்டது.
இதே போல் மற்ற காய்கறிகளின் விலை (கிலோவில்) விவரம் வருமாறு:-
வெண்டைக்காய் -ரூ.90, கத்தரிக்காய் -ரூ.60, அவரைக்காய் -ரூ.50, பீட்ரூட்- ரூ.50 முதல் ரூ.60, சின்னவெங்காயம் -ரூ.60 முதல் ரூ.80, பெரிய வெங்காயம்- ரூ.20 முதல் ரூ.25, பச்ைசமிளகாய் -ரூ.50 முதல் ரூ.60, கேரட்- ரூ.40, உருளை- ரூ.40 முதல் ரூ.50, பீன்ஸ்- ரூ.40 முதல் ரூ.50, முட்டைக்கோஸ்- ரூ.15, சுரைக்காய் -ரூ.40, பாகற்காய்- ரூ.50 முதல் ரூ.60, கறிவேப்பிலை - ரூ.100 என விற்பனை செய்யப்பட்டது.
மேலும் உயர வாய்ப்பு
இது குறித்து டி.கே.மார்க்கெட் காய்கறி வியாபாரி அப்பாஸ் கூறும் போது, கடும் பனிப்பொழிவு காரணமாக கோவை டி.கே. மார்க்கெட்டிற்கு காய்கறிகள் குறைந்த அளவே வருகின்றன.
இதனால் விலை அதிகமாக உள்ளது. விளைச்சல் குறைந்ததால் தக்காளி கிலோவுக்கு ரூ.20 வரை அதிகரித்துள்ளது.
இதுபோன்று பிற காய்கறிகளின் விலையும் கனிசமாக உயர்ந்து உள்ளது. பனிப் பொழிவு குறைந்து வெயில் காலம் தொடங்கினாலும் காய்கறிக ளின் விலை மேலும் உயரவே வாய்ப்பு உள்ளது என்றார்.