ரூ.2கோடிக்கு காய்கறி விற்பனை


ரூ.2கோடிக்கு காய்கறி விற்பனை
x

ரூ.2கோடிக்கு காய்கறி விற்பனை

உடுமலை

உடுமலை உழவர் சந்தையில் கடந்தமாதம் (அக்டோபர்) ரூ.2 கோடியே 9 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையானது.

உடுமலை உழவர்சந்தை

உடுமலை உழவர்சந்தையில் கடந்த மாதம் (அக்டோபர்) 2,063 விவசாயிகள் மொத்தம் 7 லட்சத்து 99 ஆயிரத்து 70 கிலோ காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த காய்கறிகள் மொத்தம் ரூ.2 கோடியே 9 லட்சத்து 47ஆயிரத்து 335-க்கு விற்பனை ஆனது. இந்த காய்கறிகளை பொதுமக்கள் 94 ஆயிரத்து 233பேர் வாங்கி பயனடைந்தனர்.

கடந்த செப்டம்பர் மாதத்தை விட, அக்டோபர் மாதம் காய்கறிகளை கொண்டு வந்திருந்த விவசாயிகளின் எண்ணிக்கை 79 பேர் குறைவாக இருந்த நிலையில், காய்கறிகளின் வரத்து 13 ஆயிரத்து 300 கிலோ கூடுதலாக இருந்தது. ஆனால் காய்கறிகளின் விலை குறைந்திருந்ததால் மொத்த விற்பனை தொகை ரூ.9லட்சத்து 33 ஆயிரத்து 685 குறைவாக இருந்தது. காய்கறிகளை வாங்குவதற்கு கடந்த செப்டம்பர் மாதத்தை விட அக்டோபர் மாதம் பொதுமக்கள் 3ஆயிரத்து 121 பேர் அதிகமாக வந்திருந்தனர்.

காய்கறிகள் விலை

உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.25முதல் ரூ.30வரைக்கும், வெண்டைக்காய் ரூ.20 முதல் ரூ.30 வரைக்கும், தக்காளி (நாட்டு ரகம்) ரூ.10 முதல் ரூ.14 வரைக்கும், அவரைக்காய் ரூ.50 முதல் ரூ.55 வரைக்கும், புடலங்காய் ரூ.20 முதல் ரூ.24 வரைக்கும், பீர்க்கங்காய் ரூ.26 முதல் ரூ.38 வரைக்கும், சுரைக்காய்

ரூ.10முதல் ரூ.20 வரைக்கும், பாகற்காய் ரூ.40 முதல் ரூ.60வரைக்கும், கொத்தவரை ரூ.40-க்கும், பூசணிக்காய் ரூ.15-க்கும், அரசாணிக்காய் ரூ.15 முதல் ரூ.20 வரைக்கும், பச்சை மிளகாய் ரூ.28 முதல் ரூ.36வரைக்கும் விற்பனையானது.

சின்னவெங்காயம் ரூ.65 முதல் ரூ.80 வரைக்கும், பெரிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ.45 வரைக்கும், பொறியல் தட்டை ரூ.28-க்கும், பச்சை மொச்சை ரூ.55-க்கும், முருங்கைக்காய் ரூ.50முதல் ரூ.70 வரைக்கும், சேனைக்கிழங்கு ரூ.44-க்கும், கருணைக்கிழங்கு ரூ.48-க்கும், உருளைக்கிழங்கு ரூ.45 முதல் ரூ.48 வரைக்கும் காரட் ரூ.65-க்கும், பீட்ரூட் ரூ.15 முதல் ரூ.30 வரைக்கும், ஊட்டி பீட்ரூட் ரூ.60-க்கும், முட்டைக்கோஸ் ரூ.35 முதல் ரூ.38 வரைக்கும், முள்ளங்கி ரூ.18 முதல் ரூ.20 வரைக்கும், பூண்டு ரூ120-க்கும், இஞ்சி ரூ.60-க்கும் விற்கப்பட்டது. புஷ்பீன்ஸ் ரூ.70-க்கும், மேரக்காய் ரூ.30-க்கும், ாழைக்காய் ரூ.25முதல் ரூ.40வரைக்கும், நெல்லிக்காய் ரூ.40 முதல் ரூ.50-க்கும், கொய்யாப்பழம்

ரூ.40 முதல் ரூ.50வரைக்கும், எலுமிச்சைபழம் ரூ.80 முதல் ரூ.100 வரைக்கும், பப்பாளி ரூ.20 முதல் ரூ.24 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

----


Next Story