காய்கறி-பூக்களை ஆர்வமுடன் வாங்கி சென்ற மக்கள்


காய்கறி-பூக்களை ஆர்வமுடன் வாங்கி சென்ற மக்கள்
x

நாளை (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி பூக்கள், காய்கறி வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். இதனால் மல்லிகைப்பூ விலை ரூ.3 ஆயிரமாக உயர்ந்தது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

நாளை (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி பூக்கள், காய்கறி வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். இதனால் மல்லிகைப்பூ விலை ரூ.3 ஆயிரமாக உயர்ந்தது.

பொங்கல் பண்டிகை

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் மக்கள் புத்தாடை அணிந்து புதுநெல் அரிசியில் பொங்கலிட்டு கதிரவனுக்கு படைத்து வழிபாடு செய்வார்கள். இதில் கரும்பு, மஞ்சள், வாழைப்பழம் போன்றவை இடம் பெறும்.பொங்கலுக்கு இன்னும் 1 நாள் மட்டுமே இருப்பதால் தஞ்சை மாநகரில் கீழவாசல், சிவகங்கை பூங்கா, வடக்குவீதி, மேலவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரும்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த கரும்பை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். அதேபோல் பொங்கல் வைப்பதற்காக பயன்படுத்தப்படும் மண்பானைகளை மக்கள் வாங்கி செல்கின்றனர்.

மொச்சை

தஞ்சை புதிய காமராஜர் மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதற்கு நேற்றுகாலை மக்கள் அதிகஅளவில் வந்து இருந்தனர். இவர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் காய்கறிகளின் விலையும் அதிகரித்து இருந்தது. மொச்சையை அதிகஅளவில் மக்கள் வாங்கி சென்றனர். ஒரு கிலோ மொச்சை நேற்று ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டது.கத்திரிக்காய் ரூ.100-க்கும், வெண்டைக்காய் ரூ.80-க்கும், பீன்ஸ் ரூ.50-க்கும், அவரைக்காய் ரூ.50-க்கும், கேரட் ரூ.50-க்கும், பச்சைப்பட்டாணி ரூ.55-க்கும், பீட்ரூட் ரூ.50-க்கும், புடலங்காய் ரூ.50-க்கும், முருங்கை ரூ.170-க்கும், ஒட்டு மாங்காய் ரூ.120-க்கும், சின்ன வெங்காயம் ரூ.90-க்கும் விற்பனையானது.

மல்லிகைப்பூ விலை உயர்வு

தஞ்சை பூக்காரத்தெருவில் பூ மார்க்கெட் மற்றும் விளார்சாலையில் உள்ள சைலஜா திருமண மண்டபத்தில் உள்ள பூ மார்க்கெட்டிலும் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது. காலை முதலே மக்கள் கூட்டம் அதிகஅளவில் காணப்பட்டது. இதனால் பூக்களின் விலையும் உயர்ந்து இருந்தது. இருப்பினும் பொதுமக்கள் அதிகஅளவில் வந்து பூக்களை வாங்கி சென்றனர்.மல்லிகைப்பூ, முல்லைப்பூ, ஜாதிமல்லி உள்ளிட்ட பூக்களின் விலை உயர்ந்து இருந்தது. தஞ்சை மாநகரில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3 ஆயிரத்திற்கும், ரூ.2 ஆயிரத்திற்கு விற்ற முல்லைப்பூ ரூ.2,500-க்கும், ரூ.1,000-க்கு விற்ற ஜாதிமல்லி ரூ.1,500-க்கும், ரூ.100-க்கு விற்ற சம்மங்கி ரூ.250-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் விற்பனையானது.இது குறித்துவியாபாரிகள் கூறும்போது, மல்லிகைப்பூக்கள் வரத்து குறைவாக தான் இருந்தது. இருந்தாலும் நல்ல வியாபாரம் நடைபெற்றது. விலை உயர்ந்து இருந்தாலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து பூக்களை வாங்கி சென்றனர். ரொம்ப நாளைக்கு பிறகு வியாபாரம் சிறப்பாக நடைபெற்றது என்றனர்.


Next Story