காய்கறி விலை சரிவு
தஞ்சை உழவர் சந்தையில் காய்கறி விலை சரிவடைந்து உள்ளது.
நாஞ்சிக்கோட்டை;
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் மையப் பகுதியில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு திருவையாறு, கண்டியூர் கண்டிதம்பட்டு, கொல்லங்கரை, வேங்கராயன் குடிகாடு, மருங்குளம் பகுதிகளில் வசிக்கும் தோட்டபயிா் சாகுபடி செய்யும் விவசாயிகள் தினசரி தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயன் அடைந்து வருகின்றனர். இதனை தஞ்சை நகரில் வசிக்கும் பல்வேறு பகுதிளை சேர்ந்தவர்கள் வாங்கி செல்கிறார்கள்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக காய்கறி விலை குறைந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.72-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் நேற்று கிலோ ரூ.48-க்கும், ரூ.40- க்கு விற்கப்பட்ட புடலங்காய் ரூ.32 க்கும், ரூ.48-க்கு விற்கப்பட்ட பாகற்காய் ரூ.34- க்கும், ரூ.52-க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் ரூ.30- க்கும,் ரூ. 24-க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.14- க்கும் ரூ.48-க்கு விற்கப்பட்ட கொத்தவரங்காய் ரூ.34- க்கும் ரூ.58க்கு விற்கப்பட்ட மாங்காய் ரூ.32-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பீன்ஸ், அவரைக்காய், இஞ்சி சற்று விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.