ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு


ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு
x

ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்தது.

ஈரோடு

ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்தது.

சதம் அடித்த தக்காளி

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன.

தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதால் வரத்து குறைந்துவிட்டது. இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்து விற்பனையாகிறது.

குறிப்பாக தக்காளி விலை நேற்று முன்தினம் சதம் அடித்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் நேற்று ஒரே நாளில் ரூ.30 விலை குறைந்து ரூ.70-க்கு தக்காளி விற்பனையானது. இதேபோல் அவரை, பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய் போன்றவற்றின் விலையும் கிடுகிடுவென ஏறியது.

ஒரு கிலோ ரூ.130

கடந்த மாதம் ரூ.70-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனையானது.

ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

பீட்ரூட் - ரூ.60, கேரட் - ரூ.80, அவரை - ரூ.100, வெண்டைக்காய் - ரூ.40, கத்திரிக்காய் - ரூ.50, பாகற்காய் - ரூ.65, பீர்க்கங்காய் - ரூ.70, புடலங்காய் - ரூ.50, கொத்தவரங்காய் - ரூ.60, இஞ்சி - ரூ.220, உருளைக்கிழங்கு - ரூ.30, முருங்கைக்காய் - ரூ.60, முட்டைகோஸ் - ரூ.25, சின்ன வெங்காயம் - ரூ.70, பெரிய வெங்காயம் - ரூ.30.


Next Story