வேளாண் அதிகாரிகள் திடீர் வாகன சோதனை


வேளாண் அதிகாரிகள் திடீர் வாகன சோதனை
x

உரங்களை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதை தடுக்க வேளாண் அதிகாரிகள் பழையூரில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

உரங்களை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதை தடுக்க வேளாண் அதிகாரிகள் பழையூரில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தடை

தர்மபுரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து உள்ளதால் விவசாயிகள் பயிர் சாகுபடியில் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சாகுபடிக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் உரங்கள் அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டுமே வினியோகிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. உரங்களை தர்மபுரி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லவும், வெளி மாவட்டங்களில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு உரங்களை கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாகன சோதனை

இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன் தலைமையில் வேளாண் அலுவலர்கள் ருத்ரமூர்த்தி, அன்பரசு, கார்த்திக் ஆகியோர் அடங்கிய குழுவினர் தர்மபுரி- சேலம் மாவட்ட எல்லையில் பழையூர் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் விதிகளை மீறி மாவட்டம் விட்டு மாவட்டம் உரங்கள் எடுத்து செல்லப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். இதேபோல் மாவட்டத்தில் வேளாண்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story