ஜூஜூவாடியில் போலீசார் தீவிர வாகன சோதனை


ஜூஜூவாடியில் போலீசார் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் ஏ.டி.எம். மையங்களில் பணம் கொள்ளை போனதையொட்டி ஓசூர் ஜூஜூவாடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

ஓசூ

திருவண்ணாமலையில் 4 இடங்களில் ஏ.டி.எம். மையங்களில் மர்ம நபர்கள் தீ வைத்து பல லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடி பகுதியில், நேற்று தமிழக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு சென்ற அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த பின்னரே மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தனர். இதன் காரணமாக, மாநில எல்லைப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.


Next Story