விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் அணிவகுத்த வாகனங்கள்
3 நாள் தொடர் விடுமுறை எதிரொலியால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்தன.
விழுப்புரம்
விக்கிரவாண்டி, ஆக.14-
தமிழகத்தில் 3 நாள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வசித்து வந்த தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் நேற்று மாலையிலேயே சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த போக்குவரத்து நெரிசல் இன்று காலை 10 மணிக்கு பிறகு படிப்படியாக குறைந்தது. நேற்று மாலை முதல் இன்று காலை 10 மணி வரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து சென்றுள்ளதாக சுங்கச்சாவடி அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story